காதல் என்பது..
************
* சமாதானத்திற்கான யுத்தம்...
யுத்தத்திற்கான சமாதானம்.
* வெயிலில் குளிர்..
குளிரில் வெயில்..
* பகலில் இரவு..
நள்ளிரவில் ஒரு சூரிய உதயம்..
*மோட்டுவளையில் 70mm படம் ஓட வைப்பது..
*கூட இருந்த மணித்துளிகளை மீண்டும் மீண்டும் மீட்டெடுத்து அனுபவிப்பது...
* கனவுகளின் கர்ப்பம்..
கவிதைகளின் பிரசவம்..
*விலக விலக நெருங்குவது..
நெருங்கி வந்தால் உருகுவது..
* எப்படியும் முழுதாய் சொல்லவிட
ஏதாவது மொழியில் ஒற்றை வார்த்தைக்கு தவிப்பது..
*நிரப்ப முடியாமல் முயன்று கொண்டிருக்கும் வெற்றிடம்..
*பிரபஞ்சத்தை இடம் மாற்றி வைப்பது..
* சொர்க்கத்திற்குள் நரகம்..
நரகத்தின் உள்ளேயே சொர்க்கம்..
*கற்றுக்கொண்டதைஎல்லாம் மறக்கச்செய்வது..
தெரியாததையும் கற்றுக்கொடுப்பது..
* மரணம் வெல்லும் எளிய வழி...
*உடைந்த கண்ணாடி வளையல்களை பொக்கிஷமாக்கி.. பூர்வீக சொத்துக்களையும்துச்சமாக்குவது. .
* கனவில் ஒரு வாழ்க்கை..
வாழ்க்கையில் ஒரு கனவு..
* சுகத்தில் ஒரு வலி..வலியில் ஒரு சுகம்...
*பக்கத்து வீட்டை வேறு கிரகத்திற்கு கடத்தி விட்டு
பிரபஞ்சத்தை சுருக்குவது..
************
* சமாதானத்திற்கான யுத்தம்...
யுத்தத்திற்கான சமாதானம்.
* வெயிலில் குளிர்..
குளிரில் வெயில்..
* பகலில் இரவு..
நள்ளிரவில் ஒரு சூரிய உதயம்..
*மோட்டுவளையில் 70mm படம் ஓட வைப்பது..
*கூட இருந்த மணித்துளிகளை மீண்டும் மீண்டும் மீட்டெடுத்து அனுபவிப்பது...
* கனவுகளின் கர்ப்பம்..
கவிதைகளின் பிரசவம்..
*விலக விலக நெருங்குவது..
நெருங்கி வந்தால் உருகுவது..
* எப்படியும் முழுதாய் சொல்லவிட
ஏதாவது மொழியில் ஒற்றை வார்த்தைக்கு தவிப்பது..
*நிரப்ப முடியாமல் முயன்று கொண்டிருக்கும் வெற்றிடம்..
*பிரபஞ்சத்தை இடம் மாற்றி வைப்பது..
* சொர்க்கத்திற்குள் நரகம்..
நரகத்தின் உள்ளேயே சொர்க்கம்..
*கற்றுக்கொண்டதைஎல்லாம் மறக்கச்செய்வது..
தெரியாததையும் கற்றுக்கொடுப்பது..
* மரணம் வெல்லும் எளிய வழி...
*உடைந்த கண்ணாடி வளையல்களை பொக்கிஷமாக்கி.. பூர்வீக சொத்துக்களையும்துச்சமாக்குவது.
* கனவில் ஒரு வாழ்க்கை..
வாழ்க்கையில் ஒரு கனவு..
* சுகத்தில் ஒரு வலி..வலியில் ஒரு சுகம்...
*பக்கத்து வீட்டை வேறு கிரகத்திற்கு கடத்தி விட்டு
பிரபஞ்சத்தை சுருக்குவது..
2 கருத்துகள்:
காதல் என்பது செந்திலின் கவிதை .........
நன்றி சூழ்நிலை கைதி திரு குபேந்திரன் அவர்களே...
கருத்துரையிடுக