வேகமாய்
ஓடும் மரங்கள்.....
திரையில் விரிவதுபோல்
நிஜத்தில்
மாறி மாறி விரியும்
கிராம நகரங்கள்..
நான் நின்றுகொண்டுதான்
வருவேனென
அடம்பிடித்து
பின்னோக்கி பார்க்கும் குழந்தை..
கம்பியில் இடித்து விடாமல்
குழந்தையை
அணைத்துக்கொண்டு இளம் தாய்..
யாரையோ பார்த்து பார்த்து
மார்பில் அணைத்த
புத்தகங்களோடு
மௌனசிரிப்புடன்
பதின் பருவ மங்கை..
எதையும் ரசிக்க முடியவில்லை..
இறங்கும்போது
மீதிய வாங்கிக்க என்ற
நடத்துனர் மறந்து விடுவாரோ...???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக