"வளைகுடா தமிழ் ஆடுகள்"
திரை கடலோடி திரவியம் தேடத்தான்
நாங்கள் வந்தோம்....
பூமியின் சுழற்சிப் பாதையில்
எதிர் திசையில் பயணித்ததாலோ என்னவோ....
எங்கள் இரவுகள் விடியவே இல்லை...!!
வாயை கட்டி, வயிற்றை கட்டி
ஒரு வீட்டை கட்டினாலும்...
எங்கள் தூக்கம் என்னவோ
அடுக்கு கட்டில்களில் தான்...!!
இந்திய மதிப்பில் ஒரு பங்களாவின் வாடகை...
ஆனால், ஈரத்துண்டை கூட
கட்டிலின் விளிம்பில் தான் காயைவக்க முடியும்!!
பகலெல்லாம் எங்கள் இரத்தம் முதலாளிகளாலும்...
இரவெல்லாம் எங்கள் இரத்தம்
மூட்டைப்பூச்சிகளாலும் உறிஞ்சப்படும்!!
வெள்ளிக்கிழமை விடுமுறை...
அரசாங்க கணக்கில் மட்டும்...!!
அன்றுதான் துவைத்தல்... இஸ்திரி போடுதல் என்று
எங்கள் வேலைப்பளு இன்னும் கூடும்!!
விடுமுறை தினத்தின் மாலைப்பொழுதில்...
தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிசெல்லும்
குழந்தை மாதிரி (பாலகன் மாதிரி)
மறுநாள் யுத்தம் மனசுக்குள் ஓடும்!!
இருந்தும்... இந்த விடுமுறைக்காக
சனிக்கிழமை முதலே தொடங்கும்
எங்கள் "கவுன் டவுன்"
இன்னும் நான்கு நாள்... மூன்று நாள் என்று!!
சம்பளத்தின் அத்தியாவசிய செலவின் மிச்சமும்...
குழந்தைக்கு எச்சில் முத்தமும்...
"ஃபாரின் எக்ஸேஞ்ச்" மூலம் பரிமாறப்படும்...!!
மனைவிக்கு பூக்களை அனுப்பிவிட்டு
தலையணை மட்டும் துணையாய் இரவு...
கனவுகளோடு விடியும் மறுநாள் பொழுது..!!
ஒரு ஈழக்கவிஞன் சொன்னான்...
"குண்டு சத்தம்... துப்பாக்கி தாலாட்டல்...
விடியுமா என்பதே நிச்சயமில்லை...
அடுத்த வேளை உணவிற்கு வண்டி வருமோ.. வராதோ..
ஆனாலும் எங்கள் அகதிகள் முகாமில்
தொட்டில் கட்டப்படுகின்றன..." என்று.
அம்மா, அப்பா... அக்கா, தங்கை...
அண்ணன், தம்பி... மனைவி, மக்கள்...
சொந்த வீடு... வண்டி, வாகனம்...
எல்லாம் இருந்தும்...
எங்கள் உறவுகளோடு அளவளாவுதலை
"எதிசாலட்" நிர்ணயிக்கிறது...
பதினெட்டு வயதில் ஓட்டு போடுவோமோ...
இல்லையோ...
எங்கள் கடவுசீட்டு தயாராகி...
வாழ்க்கையை தொலைத்துவிட்டு கனவுகள் தேடி
ஓடி வரும் இளைய சமுதாயம்...
இரண்டு மாத விடுமுறையில் உறவுகள் தேடி
ஓடி வந்தால்...
"துபாயா..." என்ற ஒற்றைக் கேள்வியில்
கரண்சியின் மதிப்பின் கணக்கீட்டில்...
உடைந்து போகும் எங்கள் வாழ்க்கை!!
வீரனாருக்கும் அய்யனாருக்கும்
நேர்ந்துவிட்ட ஆடுகள்...
மஞ்சள் தண்ணீர் தெளித்தும்...
விருப்பப்பட்டு தலையாட்டுவதில்லை...!!
ஆனால்...
எல்லாம் தெரிந்தும்...
எத்தனை ஆடுகள்...விமான நிலையத்தின்
சோதனை வரிசையில் விருப்பப்பட்டே...!!!
திரை கடலோடி திரவியம் தேடத்தான்
நாங்கள் வந்தோம்....
பூமியின் சுழற்சிப் பாதையில்
எதிர் திசையில் பயணித்ததாலோ என்னவோ....
எங்கள் இரவுகள் விடியவே இல்லை...!!
வாயை கட்டி, வயிற்றை கட்டி
ஒரு வீட்டை கட்டினாலும்...
எங்கள் தூக்கம் என்னவோ
அடுக்கு கட்டில்களில் தான்...!!
இந்திய மதிப்பில் ஒரு பங்களாவின் வாடகை...
ஆனால், ஈரத்துண்டை கூட
கட்டிலின் விளிம்பில் தான் காயைவக்க முடியும்!!
பகலெல்லாம் எங்கள் இரத்தம் முதலாளிகளாலும்...
இரவெல்லாம் எங்கள் இரத்தம்
மூட்டைப்பூச்சிகளாலும் உறிஞ்சப்படும்!!
வெள்ளிக்கிழமை விடுமுறை...
அரசாங்க கணக்கில் மட்டும்...!!
அன்றுதான் துவைத்தல்... இஸ்திரி போடுதல் என்று
எங்கள் வேலைப்பளு இன்னும் கூடும்!!
விடுமுறை தினத்தின் மாலைப்பொழுதில்...
தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிசெல்லும்
குழந்தை மாதிரி (பாலகன் மாதிரி)
மறுநாள் யுத்தம் மனசுக்குள் ஓடும்!!
இருந்தும்... இந்த விடுமுறைக்காக
சனிக்கிழமை முதலே தொடங்கும்
எங்கள் "கவுன் டவுன்"
இன்னும் நான்கு நாள்... மூன்று நாள் என்று!!
சம்பளத்தின் அத்தியாவசிய செலவின் மிச்சமும்...
குழந்தைக்கு எச்சில் முத்தமும்...
"ஃபாரின் எக்ஸேஞ்ச்" மூலம் பரிமாறப்படும்...!!
மனைவிக்கு பூக்களை அனுப்பிவிட்டு
தலையணை மட்டும் துணையாய் இரவு...
கனவுகளோடு விடியும் மறுநாள் பொழுது..!!
ஒரு ஈழக்கவிஞன் சொன்னான்...
"குண்டு சத்தம்... துப்பாக்கி தாலாட்டல்...
விடியுமா என்பதே நிச்சயமில்லை...
அடுத்த வேளை உணவிற்கு வண்டி வருமோ.. வராதோ..
ஆனாலும் எங்கள் அகதிகள் முகாமில்
தொட்டில் கட்டப்படுகின்றன..." என்று.
அம்மா, அப்பா... அக்கா, தங்கை...
அண்ணன், தம்பி... மனைவி, மக்கள்...
சொந்த வீடு... வண்டி, வாகனம்...
எல்லாம் இருந்தும்...
எங்கள் உறவுகளோடு அளவளாவுதலை
"எதிசாலட்" நிர்ணயிக்கிறது...
பதினெட்டு வயதில் ஓட்டு போடுவோமோ...
இல்லையோ...
எங்கள் கடவுசீட்டு தயாராகி...
வாழ்க்கையை தொலைத்துவிட்டு கனவுகள் தேடி
ஓடி வரும் இளைய சமுதாயம்...
இரண்டு மாத விடுமுறையில் உறவுகள் தேடி
ஓடி வந்தால்...
"துபாயா..." என்ற ஒற்றைக் கேள்வியில்
கரண்சியின் மதிப்பின் கணக்கீட்டில்...
உடைந்து போகும் எங்கள் வாழ்க்கை!!
வீரனாருக்கும் அய்யனாருக்கும்
நேர்ந்துவிட்ட ஆடுகள்...
மஞ்சள் தண்ணீர் தெளித்தும்...
விருப்பப்பட்டு தலையாட்டுவதில்லை...!!
ஆனால்...
எல்லாம் தெரிந்தும்...
எத்தனை ஆடுகள்...விமான நிலையத்தின்
சோதனை வரிசையில் விருப்பப்பட்டே...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக