நாளைக்கு
காலைல
நேரமா கிளம்பினாத்தான்
மொத பஸ்ஸ புடிக்கலாம்...
கடன வாங்கிட்டு
இப்படி திடீர்னு
கால நீட்டிட்டானய்யா..
எப்படி வசூல் பண்றது...
காரியம் பத்தாம்நாளே
பண்ணிடுவாங்களா..
பதினாறு நாள்
இழுத்துடுவான்களா தெரியலையே...
அட பாவிகளா..
ஒரு டீத்தண்ணி
வச்சு கொடுக்க கூட
ஆள் இல்லையேப்பா...
நலல மனுஷன்..
எல்லார்கிட்டவும்
சிரிச்சு சிரிச்சு பேசுவாரு...
அழவும் முடியாமல்
உட்காரவும் முடியாமல்..
கால்மாட்டிலேயே
முகம் புதைத்து
விசும்பும் மனைவி..
எதுவும் தெரியாமல்
மாலை மரியாதையுடன்...
யாரோ-- இல்லை நானோ...
ஆனால் "அது"வாக....
நீண்டு கொண்டே
இருக்கிறது இரவு...
உலகில் நீளமான இரவு
பிணம் காக்கும் இரவென்று
நிறைய பேருக்கு புரிகிறது... !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக