நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

சில தேடல்களும் தேடல் சார்ந்த இடமும்....

தாயின் கருவறையிலிருந்து 
உலகம் என்ற இந்த கழிவறையில் விழுந்த
சில மணித்துளிகளில் தொடங்கியது
பசி தீர்க்கும் முலைக்கான என் முதல் தேடல்...

ஒளிந்து விளையாடும் சாக்கில்
இன்னும் சில வருடங்களில்
மாமியாராய் அவதாரமெடுக்கப்போகும்
அன்றைய சிறுமியிடம்.., குதிர்மறைவில்
மூத்திரக்கரிப்பினூடே தொடங்கியது
ஒரு முக்கோணத்தேடல்.....

பனியன் நகருக்கு பஸ் ஏறி..
ஒரு அதிகாலையில் சற்குணம் மாமாவின்
அறைக்கதவை தட்டிய
அன்று தொடங்கியது என் வேலைக்காண தேடல்...

அரும்பு மீசை முளைத்த அந்த நாட்களில்
தனபால் அண்ணன் பொழுது போக
வாங்கி வந்த புத்தகங்களில் தொடங்கியது
என் கவிதைத் தேடல்...

சில தேடல்கள் தெளிந்திருக்கின்றன...
பல தேடல்கள் தொலைந்திருக்கின்றன....
இறுதி வரை தொடர்வது இந்த தேடல் தான்....
எது வாழ்க்கை...????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக