நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

நிற்கிறது...
சிரிக்கிறது...
நெருங்கி போகையில் 
விலகி ஓடுகிறது...
ஒளிந்து கொண்டு 
கண்ணாமூச்சி ஆடுகிறது...
ஏமார்ந்த வினாடியில் 
'சப்'பென முகத்தில் அரைகிறது...
'போ' என்று 
போர்வை மூடி படுத்தால்..
போர்வை விலக்கி 
மூக்கு கடித்து
முகத்தில் உமிழ்கிறது...!!!
இறுதியில் எப்படியும் 

வசப்பட்டு விடுகிறது...

என் குழந்தையும் - கவிதையும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக