நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

சனி, 4 பிப்ரவரி, 2012

திடீரென ஞானம் வந்த புத்தனாய்
ஒரு மாதமாய் பெயிண்ட் டப்பாவில் சேர்த்த
ஐந்து காசும் பத்து காசும்.. அதிக பட்சமாய்
இருபது காசும்.. செட்டியார் கடையில்
பொட்டு கேப் பாய் உருமாறும்.....
சமமாய் தேய்ந்திருக்கும்
கப்பிரோட்டின் கருங்கல்லில்
வெடிக்கும் ஒசையில் தொடங்குமெங்கள் தீபாவளி..!!!

கமலத்தக்காவின் கைவண்ணத்தில் பொங்கலும்..
மணி வாத்தியாரின் தயவில் ஒரு லட்டும்
அலுமினியத்தட்டில் விழும்...!!
"தம்பி.. வெடி வாங்க போமாடா..."
அன்பும் அதட்டலும் சமமாய் கலந்திருக்கும்
அப்பாவின் குரல்...
நன்னம்பிக்கை முனையடைந்த
வாஸ்கோட காமாவாய்..
எம் முகத்தில் புன்னகைத் தருவிக்கும்...!!

" ஆமா ராவுத்தரே.. பய காலைல இருந்து எங்கயும் போகல..."
மதுக்கூர் ராவுத்தரின் கேள்விக்கு
புன்னகைத்து பதிலளிப்பார் அப்பா...
ஒருவழியாய்.. லக்ஷ்மி- சரம்
சோளப்பொறி - சங்கு சக்கரமென
காகிதப்பை கனமாகும்...

அரசாங்கத்தை ஏமாற்றி கருப்பு பணமாய்
பதுக்கி வைக்கும் ஒரு அரசியல் வாதியின் லாவகத்தோடு...
காலையில் கால் சட்டைப் பையில்
மடித்து வைத்த "சூப்பர் பை"...
வருண பகவானை ஏமாற்றி
எம் பட்டாசு பண்டலை பாதுகாக்கும்..

அடுப்பனலின் இளம் சூடும்..
கரண்டியில் காயவைத்த எண்ணெயுமாய்
விடியுமெங்கள் தீபாவளி...

ம்ம்ம்.... நாம்.. வளர்நதோம்...
எம் தீபாவளி....??
குப்பியில் அடைத்த மதுவும்...
கொட்டகையில் சீட்டுக்கு கட்டுமாய்...!!!

அடடா.... எதைத் தேடுகிறோம்...
என்ன தொலைத்து விட்டோமெனத் தெரியாமலேயே...!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக