நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 8 பிப்ரவரி, 2012

உன் கூந்தல் 
அருவியில்
 நீராட 
அதிர்ஷ்ட குலுக்கல் நடத்தி 
ஒற்றை ரோஜாவை 
தேர்ந்தெடுத்துக்கொண்டு 
போய் விட்டாய்... 
கூடையில் உள்ள 
மற்ற ரோஜாக்கள் 
விரக்தியில் 
உலர்ந்து போனதாய் 
பூக்காரி புலம்புகிறாள்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக