நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 2 பிப்ரவரி, 2012

தூங்கு மகளே.. தூங்கு.. 

இயந்திர உலகில் 
இன்னொரு 
இயந்திரமாய் மாற 
நீ தூங்காமல் 
படிக்க வேண்டி இருக்கும்.. 

பகலில் 
அமெரிக்க தொழிலதிபரின் 
வியாபாரம் தழைக்க 
இங்கே நீ இரவெல்லாம் 
தூங்காமல் 
உழைக்க வேண்டி
இருக்கும்.. 

அரசியல் அரக்கர்கள்
அவர்களின் வாரிசுகள் வாழ 
உன் தூக்கத்தையும் 
களவாடக்கூடும்..

அப்பாவித்தகப்பனுக்கு 
மகளாய் 
பிறந்ததை எண்ணி 
நீயே உன் தூக்கம் 
தொலைக்கக்கூடும்.....

இப்போதே தூங்கு  மகளே.. தூங்கு...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக