நீ புன்னகைக்க வேண்டாம்..
கடைக்கண்ணால்
பார்க்க வேண்டாம்..
நாணப்பட வேண்டாம்...
உன் தோழியிடம்
அவன் என்னை
பாத்துகிட்டே இருக்காண்டி..
என்றெல்லாம்
சொல்ல வேண்டாம்...
முறைத்து விட்டு போ...
அது போதும்..
நான் உனக்காக காத்திருப்பது
உனக்கும் தெரிந்திருக்கிறதென்று
நான் தெரிந்து கொள்ள...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக