நான்
அணைத்துக்கொண்டு
படுத்திருக்கும்
நம் நீல இரவுகளின்
நினைவுகளை தின்று விட
நீண்டிருக்கிறது
இந்த கோர இரவு...
அலாரம்
அடித்து அடித்து ஓய்கிறது...
புல்லினங்கள்
கூவி இரைதேடி
கூட்டிலடைகின்றன..
சூரியனும்
சோம்பல் முறித்து
எழுந்து எழுந்து
உறங்கச்செல்கிறது.....
வாரம் மாதமாகி..
பின் வருடமாகிறது..
நீயின்றி என் பகல்கள் கூட
வெள்ளை இரவாகவே தொடர்கிறது..
நான் உன் மடி சேரும் நிமிடத்தில்
அந்த நினைவுகளை
தின்ன இயலாத இரவு
விடியலை நோக்கி மெல்ல நகர்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக