நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

சனி, 18 பிப்ரவரி, 2012

மூக்கு உடைந்தும் 
ஒற்றை கை இழந்தும் 
மூளியாகி கிடக்கிறது  
பழைய சைக்கிளில் 
மிஞ்சிய மணியுடன் சேர்ந்து 
ஒரு வெள்ளை சாக்கில்... 
என்னால் 
தினசரி 
குளிப்பாட்டப்பட்டும் 
அலங்கரிக்கப்பட்டும் 
துணையாயிருந்த 
மரப்பாச்சி பொம்மை... 

என் குழந்தை டெடி பேருடன் 
பேசிக்கொண்டிருக்கிறாள்... 
என்னை சுமக்க தயாராய் நிற்கிறது 
நூற்று இருபத்தைந்து சி சி.. 

அவைகளிரண்டும் 
எங்களைப்பற்றி 
பேசிக்கொண்டிருக்கின்றன..
சத்தமிலாமல்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக