நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

ராட்சஷிகளை 
அழகிகளாக்கி ரசிக்கவும்.. 
பைத்தியக்கார பட்டத்தை கேட்டு 
(லூசாடா நீ..?)
புளங்காகிதமடையவும் 
காதல்தான் கற்றுத்தருகிறது.. !!!
அடுக்கு மாடி குடியிருப்பில் 
எங்கள் குழந்தைகளுக்கு 
வானமே அன்னியமாயிருகும் போது 
அடம்பிடிக்கும் குழந்தைக்கு 
காட்டி சோறூட்ட  
நிலாவிற்கு 
நாங்கள் எங்கே போவோம்..!!!

புதன், 29 ஆகஸ்ட், 2012

விளக்கை அணைப்பதற்காக 
வாயிலில் காத்து நிற்கிறது 
தீர்ந்து விடும் இரவுகளும் 
தீரா கனவும்.. 
விளக்கை அணைத்துவிட்டு, 
என்னை அவைகளுக்காக 
படுக்கையில் கிடத்திவிட்டு 
வெளியேறுகிறேன்.. 
உன்னிடம் பேச 
இன்று நிறைய இருக்கிறது..!!!

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

குருதி கசிந்த 
இதயம் நக்கி 
ருசிகண்ட காதல் பூனை 
இன்னுமொரு துளிக்காய் 
காத்திருக்கிறது...
வாசனை பிடித்த மூக்கை 
நாவால் துழாவியபடி.. 
உன் கத்தியை இன்னொரு முறை 
ஆழமாய் இறக்கு.. 
பூனைக்காவது உன்னால் 
உபயோகமிருக்கட்டும்..!!!

என் அஸ்வமேதயாக குதிரை 
உன் வீட்டு கொட்டடியில் 
உறங்கி கிடக்கிறது.. 
மீட்டுச்செல்ல வந்த என்னையும் 
கண்களால் 
கைது செய்திருக்கிறாய்.. 
ஆனால்...
ஆள்வதற்கு 
எனக்கு இப்போதுதான் 
புதிய ராஜ்ஜியம் கிடைத்திருக்கிறது..!!!
ஓட்டிலிருந்து 
வெளிவரமுயற்சிக்கும் 
நத்தையின் 
உணர்கொம்புகளை தீண்டும் 
விரலாய் உன் நினைவுகள்.. 
மீண்டும் நான் முடங்குகிறேன்...!!!

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

உன் இதழ்களை மூடி 
நாவல் படிக்கிறாய்... 
என் இதழ்களால் மூடி 
நாவால் படிக்கிறேன்.. 
இருவருக்குமே 
இலக்கிய தாகம் 
அடங்குவதே இல்லை..!!!
நிலா என்றேன்.. 
தென்றல் என்றேன்.. 
மலர் என்றேன்...
மானே தேனே என்றெல்லாம் 
சொல்லிப்பார்த்தேன்... 
எதுவும் திருப்தியாயில்லை... 
ஒரு முத்தம் கொடுத்து விட்டு 
திரும்பி படுத்தேன்... 
மனதில் நினைத்ததை 
சரியாய் சொல்லிவிட்ட திருப்தியுடன்...!!!
உனக்கு கொடுக்க 
எதுவுமே இல்லையடி என்னிடம்...
என்கிறேன் நான்!! 
உன்னை தவிர 
வேறு எதுவும் இல்லை 
உன்னிடம் கேட்க..
என்கிறாய் நீ..!!

கைகொட்டி சிரிக்கிறது காதல்..!!!

கொழுந்து விட்டு எரியும் 
தீபாராதனை தட்டை சுழற்றி 
மணியடிக்கும் 
குருக்களின் இடைவெளியில் 
இறைவனை தரிசிக்க 
முன்னோக்கி குனிந்து 
கைகூப்பி நிற்கிறது 
கூட்டம்... 
எதிர்வரிசையில் நிற்கும் 
உன்னோக்கி குனிந்து நிற்கிறேன் 
நான்.. 

கைகொட்டி சிரிக்கிறது காதல்..!!!

எங்க போய் தொலைஞ்சான்.. 
கோபம் வருகிறது உனக்கு... 
இப்போதானடி பேசிட்டு வந்தேன்....
என் கூடவே இருக்க நினைக்கும் 
உன் காதலை நினைத்து 
கர்வ சலிப்பு எனக்கு .. 
திரையில் மின்னுகிறது 
நான் தவறவிட்ட உன் அழைப்பு.. 

கைகொட்டி சிரிக்கிறது காதல்..!!!

ஜன்னலோர இருக்கை கேட்டு 
தோழியுடன் சண்டை பிடித்து 
இயற்கையை ரசித்தவள் 
நான் ஏறியபின் 
உட்புறம் திரும்பி 
உதடுகளால் தோழியிடமும்
கண்களால் என்னிடமும்
உரையாடலை தொடங்குகிறாய்...

கை கொட்டி சிரிக்கிறது காதல்..!!

‎"எக்கேடோ கெட்டு   ஒழி.."
புகை சகிக்காமல்
மணல் உதறி விலகி நடக்கிறாய்...
"என்ன ஆச்சு...என்ன ஆச்சு.."
தொடர்ந்து கேட்கிறது அலைகள்..
மௌனித்திருக்கிறேன் நான்...
அரைமணி கடக்கவில்லை..
" எங்கடா இருக்க...." அலை பேசி கேள்வி...

கை கொட்டி சிரிக்கிறது காதல்...!!

கோயில் சுவற்றில்
வெடிப்பில் விழுந்த விதையாய்
காத்திருக்கிறேன் நான்..
உன் பார்வை ஈரம்
பட்ட வினாடியில்
முளைக்கத்தொடங்கி..
நீ மறுக்க மறுக்க
உன்னுள் விஸ்வரூபமெடுக்கிறேன் நான்..
கையறு நிலையில் உடைகிறது
என்னை விலக்கிவிட துடித்த உன் திமிர்..

கை கொட்டி சிரிக்கிறது காதல்..!!!

சொல்லிவிட்டு
அன்றே மறந்துவிட்டேன் அதை..
"இவன் சொல்லி
நான் என்ன செய்வது.."
ஒவ்வொரு நாளும்
உன் கர்வம் கேட்ட இந்த கேள்விதான்
என்னை உன்னுள்
ஆழமாய் பதியனிட்டது.
நீ மறுக்க மறுக்க
உன்னுள் முளைத்து
வேர்விடுகிறேன் நான்..
இறுதியில்
எனக்காக செய்ததை மறைத்து
இயல்பாய் செய்ததாய்
உனக்கு நீயே சொல்லிக்கொள்கிறாய்..

கை கொட்டி சிரிக்கிறது காதல்..!!!






வியாழன், 23 ஆகஸ்ட், 2012

குதிரை இல்லை என்றாலும் 
பரவாயில்லை.. 
சிறைஎடுக்கும் 
அவசியமில்லை.. 
ஒரே ஒரு ஜாடை காட்டு 
என் பிருத்வி ராஜனே.. 
ஓடோடி வந்து விடுகிறேன்.. 

வரதட்சனை தர 
வசதி இல்லாத சம்யுக்தா...!!!
ஒரே ஒரு வார்த்தைக்காக 
காத்திருக்கிறேன்.. 
உறுமீனெல்லாம் வேண்டாம்.. 
ஒரு மீன் கிடைத்தால் போதும் என்று 
காத்திருக்கும் கொக்கு மாதிரி... 
அந்த ஒரு வார்த்தை கிடைத்துவிட்டால் 
உனக்கான ஒரு 
கவிதையை படைத்துவிடுவேன்...!!!
என் கடிகாரத்தின் 
வினாடி முள் 
வருடத்தை நகர்த்துகிறது , 
நிமிட முள் 
ஆயுளை நகர்த்துகிறது..
மணி முள்ளோ 
ஈராறு ஜென்மங்களை நகர்த்துகிறது..
கொடுத்த காலக்கெடு 
முடியும் முன் 
வினாடி முள் நகர்த்துவது 
ஜென்மங்களாய் இருக்க கூடாதா என
ஏங்க வைக்கிறது..
உன்னோடு நான் விளையாடும்
காதல் விளையாட்டு..!!!
வாதச்சமரில் 
சொல்லம்புகளால் 
குருதி கசியா ரணமேற்படுத்தி விட்டேன்.. 
நீர்த்துளி தெறிக்கும் விழி ஜன்னலில் 
உன் வலியுணர்கிறேன்.. 
கண்ணுக்கு தெரியாத 
காயங்களில் 
அன்பெனும் மருந்தை 
இதழ்களில் எடுத்து 
இதழ்களில் பூசுகிறேன்.. 
என்னை விட்டு விலக இயலா
பாசக் கயிறு
பிணைக்கிறது நம்மை..!!!
உதறி விட்டாலும் 
செருப்பில் ஒட்டிக்கொண்டு 
வீடு வரை வந்து விடும் 
கடற்கரை மணல்மாதிரியே 
நாக்கால் 
துழாவும் போதெல்லாம் 
தட்டுப்படுகிறது 
உதட்டில் 
உன் முத்த ஈரம்... !!!

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

பௌர்ணமிக்கு 
மத்தியில் இரண்டு சூரியன்கள்... 
அவள் கண்கள்..!!!
இன்னொருமுறை நீ 
கடற்கரைக்கு போகாதே... 
உன்னை 
மீண்டும் பார்க்கும் 
ஆவலில் தான் 
கடல் ,சுனாமியாய் 
ஊருக்குள் வந்ததாம்..!!!
நீ 
என்ன சொல்லிக்கொண்டிருக்கிராய் என்று  
நான் கவனிக்க வில்லை.. 
உன்னைத்தான் 
கவனித்துக்கொண்டிருக்கிறேன் என்று 
உனக்கும் தெரியும்.. 
ஆனாலும் 
இடையில் நிறுத்தி கேட்கிறாய்.. 
என்ன சொல்லிக்கொண்டிருந்தேனென்று.. 
அதற்கும் தலையாட்டுகிறேன் 
அனிச்சையாய்...!!!
சந்தர்ப்ப வசத்தால் 
இணைக்கப்பட்ட உடல்களின் மனசுகள்.. 
எவ்வளவு நெருக்கியும் 
விலக துடிக்கிறது... 

விரும்பி இணைந்த 
மனசுகளின் உடல்கள் 
எவ்வளவு விலக்கியும் 
நெருங்க துடிக்கிறது..!!!
குதிரை இல்லை என்றாலும் 
பரவாயில்லை.. 
சிறைஎடுக்கும் 
அவசியமில்லை.. 
ஒரே ஒரு ஜாடை காட்டு 
என் பிருத்வி ராஜனே.. 
ஓடோடி வந்து விடுகிறேன்.. 
வரதட்சனை தர 
வசதி இல்லாத சம்யுக்தா...!!!
ஒரே ஒரு வார்த்தைக்காக 
காத்திருக்கிறேன்.. 
உறுமீனெல்லாம் வேண்டாம்.. 
ஒரு மீன் கிடைத்தால் போதும் என்று 
காத்திருக்கும் கொக்கு மாதிரி... 
அந்த ஒரு வார்த்தை கிடைத்துவிட்டால் 
உனக்கான ஒரு கவிதையை 
படைத்துவிடுவேன்...!!!
என் கடிகாரத்தின் 
வினாடி முள் 
வருடத்தை நகர்த்துகிறது , 
நிமிட முள் 
ஆயுளை நகர்த்துகிறது..
மணி முள்ளோ
ஈராறு ஜென்மங்களை நகர்த்துகிறது..
கொடுத்த காலக்கெடு
முடியும் முன்
வினாடி முள் நகர்த்துவது
ஜென்மங்களாய் இருக்க கூடாதா என
ஏங்க வைக்கிறது..
உன்னோடு நான் விளையாடும்
காதல் விளையாட்டு..!!!
வாதச்சமரில் 
சொல்லம்புகளால் 
குருதி கசியா ரணமேற்படுத்தி விட்டேன்.. 
நீர்த்துளி தெறிக்கும் விழி ஜன்னலில் 
உன் வலியுணர்கிறேன்.. 
கண்ணுக்கு தெரியாத
காயங்களில்
அன்பெனும் மருந்தை
இதழ்களில் எடுத்து
இதழ்களில் பூசுகிறேன்..
என்னை விட்டு விலக இயலா
பாசக் கயிறு
பிணைக்கிறது நம்மை..!!!

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

தனிமையில் நெஞ்சு விம்மி 
கண்ணீராய் வெளிப்படும் 
மௌன அழுகைகள்... 
சாய்ந்து கொள்ளும் உரிமையுடைய 
தோளை பார்த்த உடன் 
வெடித்து சிதறுகிறது....
முதுகு குலுங்கும் 
பேரழுகையாய்..!!!

ஒவ்வொரு சோக நிகழ்விலும் 
யாரோ ஒருவர் 
கண்ணீர் அடக்கி காத்திருக்கிறார்.. 
சாய்த்துகொள்ளும் 
தோள் வரும் வரையில்... 
வெடித்து அழுவதற்கு..!!!
காட்டில் காயும் நிலா..
கடலில் பெய்யும் மழை....
பாறையில் விழுந்த விதை...
விரயமாபவை வரிசையில் 
சேர்க்க மறக்காதீர்கள்.. 
வளைகுடா வாசிகளின் இளமை..!!!
அலை பேசியில் 
நீ அழைத்தால் மட்டும் 
அவசரமாய் 
ஹெட் போனை தேடி எடுத்த பின்னே 
அழைப்பை ஏற்கிறேன்.. 
உன் சிணுங்கும் குரலை 
சிதறாமல் பருகிவிட..!!!
சில எதிர்பார்ப்புகள் தான் 
ஏமாற்றத்தை உணர்த்துகிறது.. 
எதிர்பார்ப்பில்லை எனில் 
ஏமாற்றமும் இல்லை..!!!
ஒரு சிறிய ஊடலில் 
ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது 
நம் பந்தம்..
உன்னை நேரிட்டு பார்ப்பதில்லை.. 
உன்னோடு பேசுவதில்லை.. 
ஆனாலும் நீ வருவாய் என்ற 
நம்பிக்கையும் ....
என்னை உணர்கிறாய் என்ற 
எண்ணத்திலும் சிலிர்கிறது மனசு.. 
என்னை கவனிக்கிறாய் என்பதிலும் 
நான் உன்னை கவனிப்பதை 
உனக்கு  உணர்த்துவதிலும் 
கூடுதல் சிரத்தை எடுக்கிறது மனசு..
உனக்கும் தானே???

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

இரண்டாம் உலக யுத்தம் தான் 
முடிந்திருக்கிறதாம்.. 
மூன்றாம் உலக யுத்தம் 
எப்போது வேண்டுமானாலும் 
வரலாமாம்..
என்னை பொறுத்தவரை..
யாருக்குமே தோல்வி இல்லாமல்
எத்தனையோ உலக யுத்தங்கள்
நடந்தேறிவிட்டன...
ஆம்..
என் உலகம் நீதானே..??

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

நம்மை தொடர்வதோ- 
வழிகட்டுவதோ... 
நம் நிழல்களின் பயணப்பாதை 
வெளிச்சத்தால் தீர்மானிக்கப்படுகிறது..!!!
அநாதை குழந்தைகளுக்கு 
அம்மா- அப்பா இல்லை என்று 
யார் சொன்னது... 
அவர்களில் அநேகம் பேருக்கு 
இரண்டு அம்மா அப்பா இருக்க கூடும்... 
அப்பாவும் அவர் மனைவியும்.. 
அம்மாவும் அவள் கணவனும்...!!!
வார்த்தை வளையங்களை 
கோர்த்து கோர்த்து 
கவிதை சங்கிலி செய்கிறேன்... 
காதல் தேர் இழுக்க... 
என்  மூலவர்  இந்த தேரிலும்
உற்சவராய்...!!!
தெரியாமலோ- 
திட்டமிட்டோ உருவப்படும் 
ஒற்றை செங்கல் 
சரித்துவிடுகிறது... 
பார்த்து பார்த்து கட்டிய 
நம்பிக்கை கோட்டையை..!!!
ஆறுமாதத்திற்கு முன் கொலை செய்யப்பட்டு 
நெகிழி பையில் உறையவைக்கப்பட்ட 
கோழி காத்திருக்கிறது... 
ஏதோ ஒரு மனித வயிற்று 
மயானத்திற்காக...!!!
"கிழம் படுத்துகிடக்கு 
தெரியாம தின்னுட்டு போ"
மகனின் கையில் வைத்த 
வடை- பணியாரம் எல்லாவற்றையும் 
மிக தைரியமாய் 
இலையில் வைக்கிறார்,,,, 
தாத்தாவுக்கு படையல்...!!!
ஒரு கனவிற்கான
விதையை ஊன்றி காத்திருந்தேன் .. 
வந்தாய் சென்றாய்.. நீரூற்றி.. 
விரக வெப்பம் போதும்.. 
கனவு முளைக்கும்...!!!
வாரணமாயிரம் 
சூழ இல்லை.. 
பூரண பொற்குடம் 
ஏந்தவில்லை..
இந்த கண்ணன் காத்திருக்கிறான்.. 
ஒரு மீராவின் வருகை வேண்டி...!!!