நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 20 மே, 2012

ஒவ்வொருவர் பிறந்த நாளிலும் 
ஒரு நட்சத்திரம் தோன்றுமாம்.. 
நீ பிரிந்த அன்று 
ஒரு நட்சத்திரம் 
உதிர்ந்து விழுந்த வினாடியில் தான் 
அதை நம்பத்தொடங்கினேன் நான்..!!!
தூக்கத்தை திருடிக்கொண்டு 
இனிய கனவுக்கு வாழ்த்திவிட்டு 
விடை பெறுகிறாய்..
தூக்கத்தை தொலைத்த பிறகு 
எங்கிருந்து வரும் கனவு..??
கனவில் வந்தேனேன்றாய்..
நம்பவில்லை நான்..
அதே நாள் 
அதே நேரம் 
என்னுடனிருந்தாய் நீ .. 
பிறகெப்படி நான் அங்கு வந்தேன்..
குழப்பத்தினூடே பிரிகிறோம்..
ஏனடி நேற்று பொய் சொன்னாய்..
என்ன பொய்..
உன் கனவில் நான் வந்ததாய்..
ஓ.. நான் வந்தது அவளுக்கு தெரியாது..
என்ன குழப்புகிறாய்..
அவள் என்னை
மறைந்திருக்கச்சொன்னாள்..
தெரியாமல்தான் நான் வந்தேன்..
எனக்கு இப்பொது புரிகிறது..
வந்திருப்பது நீ அல்ல..
உன் காதல் என்று..
ஆமாம்....
நேற்று என்னோடு சரியாய் பேசவில்லையே..
இன்னுமா புரியவில்லை..
எனக்கு தெரியாமல்
அது உன்னை தேடித்தான்
அங்கு போயிருக்கும்..
மார்பில் முகம் புதைக்கிறாய்..
சுருக்கென்ற வலியுடன்
உன் இதழிடை
பற்களிலிருந்து முளைக்கிறது
ஒற்றை முடி...!!!
உயிர் பிரியும் வேதனையை 
என்னால் 
எளிதாய் எடுத்துக்கொள்ள முடியும்...
ஒவ்வொரு முறை 
நீ என்னை விட்டு 
பிரியும் போதெல்லாம் 
ஒத்திகை நடந்திருப்பதால்.. !!!
காலடியில் 
விலகி இருக்கும் 
தண்டவாளங்கள் 
தூரமாய் பார்க்க 
நெருங்குவதாய்  தோன்றும்.. 
நம் பார்வை தெரியாத தூரத்தில் 
அவைகள் இணையலாம் என்ற 
நம்பிக்கை போதும்.. 
சோதித்துப்பார்த்து 
சம்பாதிக்கபோவது ஏமாற்றமெனில் 
ஏன் சோதிக்கவேண்டும்.. 
அவைகள் இணைந்திருக்குமென்ற 
நம்பிக்கையே போதும்...
எத்தனை கண்கள் 
சறுக்கி விழுந்து 
விபத்துக்குள்ளானது 
உன் இடுப்பு சரிவில்... 
அதனால் தானோ 
இப்போது வேகத்தடைகள்..??
இமைகள் மட்டும் இல்லாதிருந்தால் 
உன் விழிவீச்சின் தொடர் தாக்குதலில் 
எத்தனை பேர் இறந்திருப்பார்களோ..

செவ்வாய், 15 மே, 2012


கூடலுக்கு பின்னான 
மெல்லிய  முத்தம் 
கூடலின் முடிவை 
சுபமென எழுதுகிறது...

ஞாயிறு, 13 மே, 2012

அம்மா...
எந்த அகராதியிலும் இல்லை.. 
இந்த ஒற்றை சொல்லுக்கு நிகரான 
வார்த்தையோ - விளக்கமோ....!!!
இரண்டு எழுத்தோ 
மூன்று எழுத்தோ தான் இருக்கும்.. 
எப்படி முயற்சித்தும் 
எழுதிவிட முடியவில்லை 
உன் முத்தத்தையும்.. 
உனக்கான முத்தத்தையும்...

சில முத்தங்கள்
சரியாய் கவனிக்கும் முன்
சட்டென முடிந்து விடுகிறது..
சத்தத்துடன்..

நிதானமான முத்தங்களோ
சத்தமில்லாமல் தொடர்கிறது...
அதையும் மீறி
எழுதிவிடும் நோக்கோடு
இன்னொரு முறை முயன்றாலோ..
பேனா பேப்பரோடு
என்னையும் தொலைத்துவிட்டு
தேட வேண்டி இருக்கிறது...

உடல் முழுதும்
உதடுகள் நடத்தும்
ஊர்வல முத்தங்களோ
உஷ்ணக்காற்றாய் மட்டுமே
உணர முடிகிறது..

எப்படியும் எழுதி விடலாம்..
இரண்டேழுதோ
மூன்றேழுத்தோ தானே...
அதுவரை தொடரட்டும்
உன் முத்தங்களும்..
உனக்கான முத்தங்களும்...!!!
அழகி பட்டம்
அவமானமாய் இருக்கிறது..
விபச்சார கைது...!!
ஏழுகடல் 
ஏழு மலை 
எதுவும் தாண்டவில்லை... 
ஒரே ஒரு கடல்தான் 
தாண்டி இருக்கிறேன்..
தாலியில் முடிந்து
பத்திரமாய் தொங்குகிறது
உயிர்...!!!
எழுத்துப்பிழை எதுவும் கூட
இருப்பதாய் தெரியவில்லை... 
கிழிதெரியப்படுகிறது.. 
காலண்டர்..!!!
உயரப்பறக்கும் பறவையின் 
சிறகிலிருந்து உதிர்கிறது... 
அதிர்ஷ்டம் கெட்ட 
ஒற்றை இறகு...!!!

உலகின்..,
மிக அபாயகரமாக
பாயக்கூடிய ஒரு நதியை
பெண்கள்..,
தங்களின் கண்களில்
அடக்கி வைத்திருக்கிறார்கள்...
உறைந்து கிடக்கிறது 
வார்த்தைகள்.. 
மௌனம் என்ற பெயரில்.. 
ஒரு கோபமோ , பாசமோ, காதலோ.. 
ஏதோ ஒரு சூரியனின் 
வருகையில் உருகி 
கண்ணீராகவோ 
புன்னகையாகவோ கூட 
வெளிப்படும்..!!
என் கவிதைகளுக்காக 
சில முத்தங்களை 
பரிசளிக்கிறாள்..... 
அந்த முத்தங்கள் 
நிறைய கவிதைகளை 
பிரசவிக்கிறது...
தொடர்ந்துகொண்டிருக்கிறது..
பரிசளிப்பும்... பிரசவிப்பும்..!!!
"ம்" என்ற 
வரம் மட்டுமே கிடைத்தது.. 
உன் வார்த்தைகள் வேண்டிய 
என் ஆயுட்கால தவத்திற்கு..
உன் விழி வீச்சில் 
உயிரியல் குண்டுகளை வீசி விட்டு 
திரும்பிப்பார்க்காமல் நகர்ந்துவிட்டாய்... 
இதயம் சிதறிப்போன இடத்தில் 
இன்னொருகாதல் 
எப்படி பூக்கும்..??
மரப்பெட்டியில் 
மடித்து வைத்திருக்கும் 
உன் புடவைக்கிடையில் 
புதைந்திருக்கும் 
எனக்கே பிடிக்காத என்னுடைய
பழைய புகைப்படம் சொல்கிறது
என் மீதான
உன் காதல் அகம் சார்ந்ததென்று...!!!

வியாழன், 3 மே, 2012

என் கவிதைகளுக்காக 
சில முத்தங்களை 
பரிசளிக்கிறாள்..... 
அந்த முத்தங்கள் 
நிறைய கவிதைகளை 
பிரசவிக்கிறது...
தொடர்ந்துகொண்டிருக்கிறது..
பரிசளிப்பும்... பிரசவிப்பும்..!!!