நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 31 ஜனவரி, 2012


நானொரு   நாட்டுப்புற  ரசிகன்... !!

நானொரு
நாட்டுப்புற
ரசிகன்...
ஓவியம் வரைகையில்
தடுக்கி கொட்டி விட்ட
வர்ணங்களை
தூரிகையால்
கலைத்து விட்டிருக்கும்
நவீன ஓவியங்கள்
எனக்கு புரியாது...

ஆண் பெண் குறிகளையும்
புணர்தலையும்
நேரடியாய் சொல்லிவிட்டு
இலக்கியமென
சூளுரைக்கும்
நவீன கவிதைகள்
எனக்கு புரிவதில்லை...

இதனைப்பார்த்து
இலக்கிய வியாதிகள்
நகைக்கக்கூடும்...
நகைக்கட்டுமே...
புரியாததை புரிவதாய்
என்னை நானே ஏமாற்றி
கைதட்டுவதை விட
நானொரு
நாட்டுப்புற ரசிகனாகவே
இருந்து விட்டு
போகிறேன்...
எனக்கான கவிதைகள்
எழுதப்பட்டுக்கொண்டே
இருக்கும்...
வானம்..
நிலா...
காற்று..
கடல்...
குதிரை என்று...!!!

என் கவிதையின் முதல் வரியும் காதலின் கடைசி வரியும்..

நான் எழுதத்தொடங்கிய
காதல் கவிதைக்கான முதல் வரி..
உன்னிடமிருந்த்து தான்
கண்டெடுக்கப்பட்டிருக்கிறது...
உதடு சுழித்த
உன் புன்னகையிலிருந்தோ..
உன் செல்லக் கோபத்திலிருந்தோ....
என் அன்பில் நீ
உருகி உதிர்த்த கண்ணீரிலிருந்தோ..
ஆனால் கடைசி வரி..
என்னிடம்தானிருக்கிறது..
அது நான் உன்னைப்பிரியும் மரணம்...!!!

நீ இல்லாத
கருப்பு பகல்களில்
தொலைந்த வாழ்க்கையை
சில கவிதைகளுடன்
கண்டுபிடிக்கிறேன்..
நீ நெருங்கி வரும்
வெள்ளை இரவுகளில்..!!!

உருண்டு புரண்டாவது
சூரியனிடம் இருந்து
ஒளிந்து கொள்ள முயற்சிக்கும்
பூகோளமாய் தோற்றுப்போகிறது
என் எல்லா
தவறுக்கான முயற்சியும்..
உன் காதல் பார்வையின் முன்...!!!

ஆண்டாண்டு காலமாய்
எதையோ உரத்து
சொல்லிக்கொண்டிருக்கிறது
தனிமையில் கூவும் அக்கா குருவி..

கருவான நாள் முதலாய்
எதையோ சொல்ல
ஓடி வந்து ஓடி வந்து
திரும்பி போகிறது கடல் அலைகள்..

சிலமுறை சுனாமியாய் வந்து
சூளுரைத்துப்போனதும்
சில பல பினாமிகளின்
காதுகளில் ஏறவே இல்லை..

நேற்று வந்த தானேயும்..
நாளை வரப்போகும்
எதுவாகவும்
காற்று கற்றுத்தரும் பாடத்தை
நாம் விளங்கத்தயாரில்லை...

இந்த நச்சுக்காற்றிலிருந்து
நல்ல காற்றை
பிரித்தெடுக்கத்தரியாமல்
சொல்ல வந்ததை
சொல்ல முடியாமல்
நாளை அக்கா குருவியும்
மரித்துப்போகும்..

எப்படி சொன்னாலும்
புரிந்துகொள்ளாத
யாரும் தேவையில்லையென
சமுத்திரம் ஒருநாள் சப்தமிடும்..
அதனை கேட்க
எந்த உயிருமில்லாமல் போகும்..!!!
இந்த கவிதைகளை 
எங்கிருந்து 
எடுக்கிறாய் என்றாள்... 
கண்ணாடி முன் 
நின்று பார் என்றேன்...!!