தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
புதன், 28 மார்ச், 2012
நிசப்தமான இரவு குளத்தில் கல்லெறிகிறது நாய்... வெளிச்ச குமிழ்கள் கிளம்புகிறது வீடுகளில்... தங்கத்தை குறி வைத்த திருடர்களும் "தங்கத்தை" குறி வைக்கும் காமுகர்களும் பதுங்குகிறார்கள்... நட்சத்திரக் கண்களால் மௌனமாய் வேடிக்கை பார்க்கிறது வானம்... இளம் விதவையின் தனிமை இரவுகள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக