இந்த மரங்கள்
என்ன பாவம் செய்தது காற்றே...
நேற்று வரை
தாயாகவும்
தோழனாகவும்
இலை கலைத்து
கோதிச்சென்ற உன்னை
கொலைகாரனாக்குமளவு
இந்த மரங்கள் செய்த குற்றமென்ன...???
குற்றமென்னவென்றா
கேட்கிறாய்...
மானுடா... கேள்...
உனக்கு
உயிர் கொடுத்த என்னை
மாசுபடுத்தி கற்பழிக்கிறாயே..
கரியமில வாயுவை
கையகப்படுத்தி
ஆக்சிஜன் அளவை
உயர்த்தி
உனக்குதவியது முதல் குற்றம்.. ..
எம் சந்ததி பற்றியோ..
உன் சந்ததி பற்றியோ ..
சற்றேனும் சிந்திக்காமல்
இந்த பூமியின் ரத்தத்தை
ஆழ்துளையிட்டு
உறிஞ்சிக்குடிக்கும் உனக்கு
மழை தருவித்துத்தந்தது
இன்னொரு குற்றம்.. ...
இவைகள்
உனக்காகமட்டுமே
பூப்பதாயும்
காய்ப்பதாயும்
கற்பனை செய்து
இன்னபிற உயிர்களை
விஷமிட்டும்,
இவைகளையே ரசாயன உரங்களால்
உயிர் உறிஞ்சியும்
வதைக்கும் உனக்கு
பழம் தந்து பாதுகாப்பது
வேறொரு குற்றம்...
எதைச்சொல்ல..
எதை விட...
குற்றமிழைத்தவன்
நீ என்றாலும்
உனக்குதவியது
மரங்கள் குற்றம்..
ஆகவேதான்
அவைகளை அகற்றினேன்...
இனி நீயே அழிவாய......
என்ன பதிலிருக்கிறது மானுடமே...???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக