நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

சனி, 10 மார்ச், 2012

நண்பனாயிருப்பது 
அத்தனை எளிதல்ல.... 
சில நேரம் 
சுயம் தொலைக்கும் 
சூழ்நிலைக்கு 
தள்ளப்படலாம்...
சந்தேகத்தின்
சாயல்கூட
படிந்து விடாமல்
பார்த்துக்கொள்ளவேண்டும்...
புரைதீர்த்த நன்மை
பயக்கவில்லை எனினும்
பொய்யுரைக்கும்
புத்திசாலித்தனம் வேண்டும்..
விட்டுக்கொடுக்கும்
விசாலமனம்
வேண்டியிருக்கும்..
ஆம்...
நண்பனாயிருப்பது
அத்தனை எளிதான
காரியமில்லை...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக