தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
புதன், 1 பிப்ரவரி, 2012
அன்று சின்ன வயதில் பொம்மைகளுக்கு எல்லாம் உயிர் கொடுத்து விளையாடினாய்... இன்று என்னை மட்டும் பொம்மையாக்கி விளையாடுகிறாய்...
நிலநடுக்கத்தில் பூமி சிலிர்கிறது... நிலா நடுக்கத்தில் என் இதயம் சிலிர்கிறது... மார்கழி காலையில் என் நிலா நீராடி வரும்போது..!!!
எனக்கும் என் தங்கைக்கும் இந்த ஆடைகள் பொருத்தமாய் இருந்திருக்கக்கூடும்.. ஒரு பணக்கார தந்தைக்கு பிறந்திருந்தால்....!!!
கொசுக்கடி இல்லை.. குளிருக்கிதமாய் ஈரானி கம்பளம்.. வியர்வை வராமல் தடுக்கும் குளிசாதன இயந்திரம்... வேண்டிய பொது விரும்பிய உணவு... சிநேகமாய் புன்னகைக்கும் நண்பர்கள்... இந்தியாவில் கிடைக்காத எல்லாம் இருக்கிறது... ரசிக்க முடிய வில்லை... நீ இல்லாத இரவுகளை...!!!
குழந்தைக்கு பறக்கும் முத்தம்.. மனைவிக்கு ஒரு பாய்டா செல்லம்.. சாமிக்கு ஒரு சல்யூட்.. சக அலுவலக நண்பர்கள் எல்லோருக்கும் மொத்தமா சேர்த்து ஒரு ஜி எம்..( குட் மார்னிங்).. எல்லாத்தையும் சுருக்கி.. வாழணும்னு ஓடினா.. வாழ்க்கை நமக்குத்தெரியாம சுருங்கிப்போச்சு...!!!
யார் கேட்டாலும் என் வயதை இரண்டு மூன்று ஆண்டுகளாவது குறைத்தே சொல்கிறேன்... ஏனென்றால்... உனக்கான என் இரவுகளை சேமித்தல்லவா வைத்திருக்கிறேன்...!!!
செவ்வாய், 31 ஜனவரி, 2012
என் நிழல்களுக்கும் தெரியாத ரகசியங்களை நான் உன்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.. விளக்கை அணைத்துவிட்டு...!!!