
உனக்கும் எனக்குமான தூர இடைவெளி
மூவாயிரத்து முன்னூற்று ஐம்பத்தொன்பது கிலோமீட்டர்கள்...
நேர இடைவெளி
இரண்டரை மணி நேரங்கள்...
ஆயினும் என்ன...
பூகோள விதிகளுக்கு முரணாய்..
நினைவுகள் எப்போதும் காற்று புகமுடியாத நெருக்கத்தில்...
உன்னுள் நானும்.. என்னுள் நீயும்..
இசைக்கிறது தேவகானம்...
சிறகு முளைத்த கிளிபோலே...
மனம் பறக்க நினைக்கும் புவி மேலே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக